திருவாரூர் நகரில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

திருவாரூர் நகரில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-30 18:45 GMT

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி நாளை (சனிக்கிழமை) ஆழித்தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் நகரில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனை சார்ந்த மதுக்கூடங்களுக்கு நாளை விடுமுறை விடப்படுகிறது. இந்த தடையை மீறும் கடையின் மேற்பார்வையாளர்கள், மதுக்கூடங்களின் ஏலதாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்