இடையக்கோட்டை பகுதியில் தக்காளி விலை உயர்வு

இடையக்கோட்டை பகுதியில் தக்காளி விலை உயர்ந்தது.;

Update:2022-12-19 23:08 IST

ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் தங்களது நிலங்களில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் தக்காளியை பறித்து விவசாயிகள் விற்பனைக்காக தங்கச்சியம்மாபட்டியில் உள்ள மார்க்கெட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். அதேபோல் வியாபாரிகளும் தோட்டங்களுக்கு நேரில் சென்று தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.

இந்தநிலையில் இடையக்கோட்டை பகுதியில் தக்காளி விலை தற்போது உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையானது. தொடர் மழையால் வரத்து குறைந்ததால் தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூ.200 முதல் ரூ.250 வரை விலை அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது. விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்