சரக்கு வேனில் கடத்திய 7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

சரக்கு வேனில் கடத்திய 7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-13 19:55 GMT

கும்பகோணம் அருகே விளந்தகண்டம் புது பைபாஸ் சாலையில் சோழபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வேனில் வந்த 4 பேரை நிறுத்தி விசாரித்தனர். அதில் தடை செய்யப்பட்ட 7 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனில் வந்த தென்காசி மாவட்ட பகுதியை சேர்ந்த முகமது நவாஸ் (வயது28), பீர்முகமது (35), மயிலாடுதுறை மாவட்டம் மல்லியம் ரெயிலடி தெருவை சேர்ந்த பிரகாஷ் (35), டிரைவர் திருவிடைமருதூர் அருகே உள்ள பாகவதபுரம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த கோகுல் (25) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்