ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

வந்தவாசியில் தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

Update: 2023-10-08 17:02 GMT

வந்தவாசி

வந்தவாசியில் தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

போலீசார் சோதனை

வந்தவாசி சீதாராமய்யர் தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தன்சிங் மகன்கள் விக்ரம்சிங் (வயது 32), ஜிக்மால்சிங் (26) ஆகிய இருவரும் மொத்த வியாபார பல்பொருள் அங்காடி நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் அவர்களின் கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

அப்போது தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான 50 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் 4 மூட்டைகளில் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த சகோதரர்கள் விக்ரம்சிங், ஜிக்மால்சிங் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்