கிராம நிர்வாக அதிகாரிக்குகொலை மிரட்டல்; 2 பேர் மீது வழக்கு

கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு யெச்துள்ளனர்.

Update: 2023-04-15 18:31 GMT

தொட்டியம் அருகே உள்ள அரசலூர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கவுரி. இவர் நேற்று பணியில் இருந்தார். அப்போது, அங்கு வந்த அரசலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் மாதவன் (வயது 25), மாதேஸ்வரன் (44) ஆகியோர் குடிபோதையில் தகாதவார்த்தையால் திட்டி கவுரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கிராமநிர்வாக அதிகாரி கவுரி தொட்டியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், மாதவன், மாதேஸ்வரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்