ஆசிாியா்களுக்கான பயிற்சி வகுப்பு

ஆசிாியா்களுக்கான பயிற்சி வகுப்பு

Update: 2022-06-06 14:14 GMT

குடவாசல்:

குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலகம் சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட கல்வி அதிகாரி தியாகராஜன் தொடங்கி வைத்து பேசுகையில்,

எண்ணும் எழுத்தும் என்ற பயிற்சி கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு நேற்று முதல் வருகிற 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆசிரியர்கள் பயிற்சி பெற்று மாணவர்களின் திறன் மேம்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என்றார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவரேகா வரவேற்றார். இதில் ஆசிரியர் பயிற்சி புள்ளியல் துறை உதவி இயக்குனர் காமராஜ், குடவாசல் வட்ட கல்வி அலுவலர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்