மாநில அறிவியல் மாநாட்டில் பங்கேற்க திருச்செந்தூர் அரசு பள்ளி மாணவிகள் 2 பேர் தேர்வு

மாநில அறிவியல் மாநாட்டில் பங்கேற்க திருச்செந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-12-01 18:45 GMT

திருச்செந்தூர்:

மாநில அளவிலான அறிவியல் மாநாட்டில் பங்கேற்க திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அறிவியல் மாநாடு

மாவட்ட அளவிலான அறிவியல் மாநாடு தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் மாணவர்கள் சார்பில் ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. இதில் திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் சார்பில் பனைமரம் காப்போம், காய்க்கனிகளின் பயன்கள், உணவு பழக்கவழக்கங்களினால் வரும் நோய்கள், என் பள்ளியை சுற்றி ஏன் இந்த சாக்கடை? மற்றும் மீனவர் வாழ்க்கை ஆகிய 5 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

திருச்செந்தூர் மாணவிகள் தேர்வு

இதில் பனைமரம் காப்போம் என்ற கட்டுரையை சமர்ப்பித்து திறம்பட விளக்கமளித்த 10-ம் வகுப்பு மாணவிகள் ஐ.துர்காலெட்சுமி, கா.காவ்யா ஆகிய 2 மாணவிகள் மாநில அளவிலான அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, பள்ளி தலைமையாசிரியர் மாரியம்மாள், பேராசிரியர் ஞானசெலின் உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர்கள் மற்றும் சக மாணவிகள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்