காதல் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்:போலீசில் பெண் புகார்

ஆண்டிப்பட்டி அருகே காதல் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று போலீசில் பெண் புகார் கொடுத்தார்.

Update: 2023-03-21 18:45 GMT

ஆண்டிப்பட்டி தாலுகா சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் விஜயலட்சுமி (வயது 24). இவர், ஆண்டிப்பட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், நானும், வருசநாடு அருகே உள்ள அரண்மனைபுதூர் பகுதியை சேர்ந்த இளங்கோவனின் மகன் இந்தியன் என்பவரும் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணம் முடிந்த மறுநாளே என்னை எனது பெற்றோர் வீட்டுக்கு செல்லுமாறு இந்தியனின் பெற்றோர் வற்புறுத்தினர். மேலும் பெற்றோர் வீட்டிற்கு சென்ற பிறகு போலீசில் புகார் செய்ய கூடாது என்றும் மிரட்டினர். இந்நிலையில் எனது குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் எனது கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்