தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் - செல்லூர் ராஜூ

தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.;

Update:2022-08-13 18:08 IST

மதுரை,

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது,

நாட்டு மக்கள் அனைவரும் தேசிய கொடியை ஏற்றி வைக்கும் பாக்கியத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் தேசிய உணர்வும், தேசப்பற்றும், தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தென்பாண்டி மண்டலம் மிகப்பெரிய தியாகத்தை செய்துள்ளது. இளைய சமுதாயத்திற்கு தேசியத்தையும் தேசப்பற்றையும் ஊட்டுகின்ற அரும்பாக்கியமாக தேசியக்கொடி ஏற்றும் வாய்ப்பை பிரதமர் கொடுத்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் செல்வாக்கு சரிந்து விட்டது. இன்றைக்கு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் மயமாகவே உள்ளது. பெரியவர்கள், மாணவர்கள் மட்டுமே போதைக்கு அடிமையாக இருந்த நிலையில் தற்போது மாணவிகளும் போதையில் சுற்றும் நிலை உள்ளது.

போதைப்பொருளை ஒழிக்க சர்வாதிகாரியாக மாறுவேன் என ஸ்டாலின் சொல்வதெல்லாம் வெறும் விளம்பரம் தான். திமுக தேர்தல் காலத்தில் சொன்ன மது ஆலைகளை மூடுவோம், மதுவிலக்கை கொண்டு வருவோம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

போதைப்பொருள்களை காவல்துறை உதவியில்லாமல் விற்க முடியாது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். எங்கள் ஆட்சியின் மதுவால் அவல நிலை சம்பவகள் எதுவும் நிகழவில்லை. திமுக ஆட்சியில் மதுவால் அவலநிலை தலை விரித்தாடுகிறது

இவ்வாறு அவர் கூறினார்.          

Tags:    

மேலும் செய்திகள்