குடியரசு தின விழாவில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் - தலைமை செயலாளர் இறையன்பு

குடியரசு தினவிழாவில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.;

Update:2023-01-20 08:59 IST

சென்னை,

குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்வில் வழக்கமாக சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இதற்கான அணிவகுப்பு ஒத்திகை சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குடியரசு தின விழாவில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். அதில் 15 விதமான அறிவுரைகளை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்