டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2-வது நாளாக முற்றுகை போராட்டம்

தேனி அல்லிநகரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2-வது நாளாக முற்றுகை போராட்டம் நடந்தது

Update: 2022-10-27 18:45 GMT

தேனி அல்லிநகரத்தில் கூட்டுறவு சங்க கட்டிடம் எதிரே டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்களின் கடுமையான எதிர்ப்பால் மூடப்பட்ட இந்த கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட கடையை நிரந்தரமாக மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று முன்தினம் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர், மேலும் 3 நாட்கள் தொடர் முற்றுகை போராட்டமும், அதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 2-வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், வெண்மணி, நாகராஜ், ஜெயபாண்டி, தாலுகா செயலாளர் தர்மர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்