திருமானூரில் த.மா.கா. ஆர்ப்பாட்டம்; 10-ந் தேதி நடக்கிறது
திருமானூரில் கர்நாடக அரசை கண்டித்து த.மா.கா. சார்பில் வருகிற 10-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.;
த.மா.கா. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்க மறுத்து, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்காத கர்நாடக அரசை கண்டித்து வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணியளவில் த.மா.கா. டெல்டா மாவட்டங்களின் சார்பாக அரியலூர் மாவட்டம் திருமானூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா. டெல்டா மாவட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாநில துணை அமைப்பு தலைவர்கள், தொண்டர்கள், த.மா.கா. விவசாய அணியின் சார்பாக டெல்டா மாவட்ட மாநில, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.