த.மா.கா. கட்சியினர் நூதன போராட்டம்
கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஊருக்குள் இரவு நேரங்களில் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என்ற மாவட்ட கலெக்டரின் உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு த.மா.கா.வினர் காதில் பூ சுற்றி நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் இதுதொடர்பாக உதவி கலெக்டர் ஜெயாவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையெனில் வருகிற 3-ந் தேதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டமும், ஊருக்குள் வராத பஸ்களை சிறைப்பிடிக்கும் போராட்டமும் நடைபெறும் என்று கூறியுள்ளனர்.