திருப்பூர் குமரன் பிறந்த தின விழா

சங்கரன்கோவில் பகுதியில், திருப்பூர் குமரன் பிறந்த தின விழா நடந்தது;

Update:2022-10-06 00:15 IST
திருப்பூர் குமரன் பிறந்த தின விழா

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் திருப்பூர் கொடிகாத்த குமரன் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப அணி மதுரை மண்டல துணைச்செயலாளர் சிவானந்த், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், ரமேஷ், விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், டாக்டர் திலீபன், நகரமன்ற உறுப்பினர் சங்கரசுப்பிரமணியன், தமிழ்செல்வன், மாரிச்சாரி, நகர பொருளாளர் அய்யப்பன், தலைமை கழக பேச்சாளர்கள் கணபதி, லட்சுமணன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவிலில் செங்குந்த முன்னேற்ற சங்க சார்பில் நடைபெற்ற கொடிகாத்த குமரன் பிறந்த நாள் விழாவில் ம.தி.மு.க. சார்பில் துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பராஜ், இளைஞர் அணி துணை செயலாளர் இசக்கியப்பன், நகர செயலாளர் ஆறுமுகசாமி, துணை செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஹக்கீம், நெசவாளர் அணி துணைச் செயலாளர் ரத்தினகுமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே செங்குந்தர் முன்னேற்ற சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட இளைஞரணி சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, நகர துணை செயலாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யது அலி, நகர்மன்ற உறுப்பினர்கள் புஷ்பராஜ் திலகம், செல்வராஜ், விஜயகுமார், அலமேலு ராமு ராம ராமர் உள்பட பலர் கலந்து உள்ளனர்.

பா.ஜனதா சார்பில் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை செங்குந்தர் முன்னேற்ற சங்க தலைவர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்