திருப்பத்தூர் நகராட்சி தலைவர் ஓட்டு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திருப்பத்தூர் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஓட்டு சேகரித்தார்.

Update: 2023-02-24 18:35 GMT

ஓட்டு ேசகரிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரிக்க குமலன்குட்டை 91-வது வாக்குச் சாவடி பகுதி திருப்பத்தூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி, திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ். ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் தலைமையில் திருப்பத்தூர் நகராட்சி தலைவர் வி.சங்கீதா வெங்கடேஷ் மற்றும் நகர தி.மு.க. எஸ்.வெங்கடேஷ் தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை 20 மாத காலத்தில் நிறைவேற்றிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனைகளை கூறி, கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.

அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்கள். ஓட்டு சேகரிப்பில் தி.மு.க. நிர்வாகிகள், முன்னோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

இதுகுறித்து திருப்பத்தூர் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், நகர தி.மு.க. எஸ்.வெங்கடேஷ் கூறியதாவது:-

அரசின் சாதனைகளை கூறி...

ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களுக்கு ஒதுக்கிய குமலன்குட்டை 91-வது வாக்கு சாவடி பகுதியில் நகர தி.மு.க. செயலாளரும், ஆவின் தலைவருமான எஸ்.ராஜேந்திரன் தலைமையில் கடந்த 25 நாட்களாக தி.மு.க. அரசின் சாதனைகளையும், 20 மாத காலத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த மகளிருக்கு பஸ்சில் இலவச பயணம், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பொங்கல் பரிசு தொகுப்பு, புதுமைப் பெண் திட்டம், உலக ஒலிம்பியாட் செஸ் போட்டி, வேளாண்மை துறை, அறநிலையத்துறை, சுகாதாரத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாதனைகளை எடுத்துக் கூறி இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதை எடுகத்துக்கூறி ஓட்டு சேகரிக்த்தோம்.

இறுதி கட்டமாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்புக்கு வருகை தர உள்ளதால் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கை சின்னத்திற்கு பெரும் ஆதரவு ஏற்பட்டுள்ளது.

பெண்கள் ஆதரவு

இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமன உதயநிதி ஸ்டாலின் எங்கள் பகுதியில் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். இதனால் கட்சியினர், பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். குறிப்பாக பெண்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறையில் செய்து வரும் சாதனைகளையும், அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி முதல்-அமைச்சர் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுவதையும், தி.மு.க. அரசின் திட்டங்களையும் வீடுவீடாக சென்று எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்களை வினியோகித்து கை சின்னத்தில் ஓட்டு சேகரித்தோம். ஓட்டு கேட்டு சென்ற இடங்களில் பொதுமக்கள் அமோக ஆதரவாளித்தனர். இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெறும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்