விராலிமலை முருகன் கோவிலில் திருப்படி பூஜை

விராலிமலை முருகன் கோவிலில் திருப்படி பூஜை நடந்தது.

Update: 2023-01-01 18:25 GMT

விராலிமலையில் முருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு படிகளை தூய்மை செய்து சிறப்பு திருப்படி பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கோவில் படிகளை தூய்மை செய்து அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து உதிரி பூக்கள் தூவி மலை அடிவாரத்தில் உள்ள படிகளில் குத்துவிளக்கு மற்றும் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். இதையடுத்து முருக பெருமான் சமேத வள்ளி-தெய்வானைக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளிட்ட கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்