சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்படி திருவிழா

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்படி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-01-29 15:31 GMT

காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு கடந்த 23-ந் தேதி பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று திருப்படி திருவிழா நடந்தது.

முன்னதாக நேற்று காலை வரசித்தி விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவரான ஆறுமுகசுவாமி சமேத வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் மலைமீது உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு விபூதி காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனையடுத்து மயில் காவடிகளுடன் பால்குட புறப்பாடு நடைபெற்றது. இதில் 108 பால்குடங்களுடன் பக்தர்கள் கலந்து கொண்டு படி பூஜை செய்து சுப்ரமணியசுவாமி சமேத வள்ளி தெய்வானையை வழிபட்டனர். படிப்பூஜையின் போது மலைக்கு செல்லும் படிகளுக்கு பக்தர்கள் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி மலையேறி சென்றனர். பின்னர் அடியாருக்கு அமுது படைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது .

அதைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டு சென்ற பால் மூலம் சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம் செய்து விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்