திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் யோகா பயிற்சி பட்டறை
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் யோகா பயிற்சி பட்டறை நடைபெற்றது.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கமும், ஆங்கிலத்துறையும் இணைந்து நடத்திய ஒரு நாள் யோகா பயிற்சி பட்டறை நடைபெற்றது. ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் பர்வதவர்த்தினி சிறப்பு விருந்தினரை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தாா். சிறப்பு விருந்தினர் கணினி துறை தலைவர் பேராசிரியர் வேலாயுதம், மாணவர்களுக்கு யோகாசனம் எவ்வாறு பயில்வது மற்றும் எவ்வாறு பயிற்சி செய்வது பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான உதயவேல், மற்றொரு சிறப்பு விருந்தினரான விலங்கியல் துறை பேராசிரியர் லிங்கதுரையை அறிமுகம் செய்தார்.
நிகழ்ச்சியின் மற்றுமொரு சிறப்பு விருந்தினரான டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர் கணேஷ், மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலரும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். இயற்பியல் துறை தலைவர் பாலு, முனைவர் சேகர், பொருளியல் துறை பேராசிரியர் மாலைசூடும் பெருமாள், வணிக நிர்வாகவியல் துறை சார்ந்த முனைவர் அந்தோணி சகாய சித்ரா, பேராசிரியர் செல்வகுமார் மற்றும் நிவேதா உள்பட திரளான மாணவர்கள் பயிற்சி பட்டறையில் பங்கு பெற்றனர்.