திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கியில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய ஊழியர்கள்

திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கியில் கோரிக்கை அட்டை அணிந்து ஊழியர்கள் பணியாற்றினர்.;

Update:2023-08-19 00:15 IST

திருச்செந்தூர்:

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் கூட்டுறவுநகரவங்கியில் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை, தங்களது சட்டையில் அணிந்து கூட்டுறவு சங்க பணியாளர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

கூட்டுறவு நகர வங்கியில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும், அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோப்பின் மீது தொடர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும். கூட்டுறவு நகர வங்கிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு உரிய பதவி உயர்வு மூலம் ஆட்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்