திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள்

விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2023-07-16 19:00 GMT

திருச்செந்தூர்:

விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் கோவில்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

பக்தர்கள் குவிந்தனர்

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர். இதற்காக கோவில் நடை நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்