குழகர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
கோடியக்காடு குழகர் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, கோடியக்காடு குழகர் கோவில் எனப்படும் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. நேற்று பவுர்ணமி விசாக நாளில் இடும்பன் சன்னதி அருகே அமிர்த புஷ்கரணியில் முருகன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.