மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜன.31 வரை அவகாசம் - அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜன.31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.;

Update:2022-12-31 12:49 IST

சென்னை,

சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜன.31-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜன.31-ம் தேதிக்கு பிறகு மீண்டும் கால நீட்டிப்பு இருக்கும் என்று இருந்துவிடாமல் இந்த நாட்களை பயன்படுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணியை நிறைவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது, 2 ஆயிரத்தி 811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் கூடுதலா

2,811 சிறப்பு முகாம்கள் மூலம் அந்ததந்த பகுதிக்கே நேரடியாக சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்