பவானிசாகர் வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

பவானிசாகர் வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

Update: 2022-12-02 21:18 GMT

பவானிசாகர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2022-ம் ஆண்டிற்கான மழைக்கு பிந்தைய வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியது. வருகிற 7-ந்தேதி வரை இந்த பணி நடைபெற உள்ளது. இதன் முதல் கட்டமாக சத்தியமங்கலம் வனக்கோட்டம், பவானிசாகர் வனச்சரகத்தில் மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்த பணியில் ஈடுபட்டனர் அப்போது பவானிசாகர் வனப் பகுதியில் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பது அதனுடைய கால் தடங்களின் மூலம் தெரியவந்ததாக வனத்துறையினர் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்