வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
குற்ற வழக்குகளில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் நிர்மல் (வயது 25). இவர்மீது திருட்டு போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வேலூர் தெற்கு போலீசார் நிர்மலை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் நிர்மலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் நிர்மலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.