வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
நெல்லை அருகே உள்ள தாழையூத்து ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்ற சூசை (வயது 22). இவர் தாழையூத்து போலீசாரால் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று சுரேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் நேற்று வழங்கினார்.