வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-08-18 17:34 GMT

தென்காசி மவுண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அபுல் ஹசன் மகன் செய்யது சுலைமான் (வயது 36). இவர் மீது தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு இடங்களில் கொலை, கொலை முயற்சி, ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட 28 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளன. எனவே இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஏற்று, செய்யது சுலைமானை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை செய்யது சுலைமான் அடைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை சிறையில் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்