ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
குருபரப்பள்ளி பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;
குருபரப்பள்ளி பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரவுடி
கிருஷ்ணகிரி ராஜீவ் நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 24). ரவுடி. இவர் மீது கிருஷ்ணகிரி தாலுகா, குருபரப்பள்ளி போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 8.11.2022 அன்று குந்தாரப்பள்ளி பகுதியில் நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் கார்த்தியை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் கார்த்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு பரிந்துரை செய்தார்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டின் பரிந்துரையை ஏற்று, கார்த்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதற்கான உத்தரவை போலீசார் சேலம் சிறையில் உள்ள கார்த்தியிடம் வழங்கினர்.