ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம்மின்னணு தேசிய வேளாண் சந்தையை விவசாயிகள் பயன்படுத்தலாம்:விற்பனைக்குழு செயலாளர் தகவல்

ஒழுங்கு விற்பனை கூடங்கள் மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தையை விவசாயிகள் பயன்படுத்தலாம் என்று விற்பனைக்குழு செயலாளர் தெரிவித்தார்.

Update: 2023-02-12 18:45 GMT

திண்டுக்கல் விற்பனைக்குழு கட்டுப்பாட்டில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, கோபால்பட்டி, நத்தம், வத்தலக்குண்டு, வடமதுரை, வேடசந்தூர் ஆகிய 8 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்படுகின்றன. இதில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, கோபால்பட்டி, நத்தம், வத்தலக்குண்டு ஆகிய 6 விற்பனை கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் இந்தியா முழுவதும் உள்ள விளை பொருட்கள் தொடர்பான தகவல்கள், ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தை அமைப்பு, வெளிப்படையான பரிவர்த்தனை ஆகியவற்றை விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம். மேலும் அதிக அளவிலான வணிகர்கள் கலந்து கொள்வதால் உயர்ந்தபட்ச விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. விற்பனை பரிவர்த்தனை பணிகள் நிறைவுபெற்றதும் எந்தவித பிடித்தமும் இல்லாமல் கிரையத்தொகை முழுவதும் விவசாயி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

விவசாயிகளின் விளைபொருட்களை இடைத்தரகர் இல்லாமல் போட்டி விலைக்கு விற்பனை செய்து கொடுப்பதே இதன் நோக்கமாகும். எனவே விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என்று, திண்டுக்கல் விற்பனைக்குழு செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்