மக்கள் நீதிமன்றம் மூலம், 4 ஆயிரத்து 365 வழக்குகளுக்கு தீர்வு

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 4 ஆயிரத்து 365 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2022-08-14 18:20 GMT

வெளிப்பாளையம்:

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 4 ஆயிரத்து 365 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்பேரிலும், நாகை மாவட்ட தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் பேரிலும் நாகை மாவட்ட கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) நடைபெற்றது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு காணும்பொருட்டு இந்த மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.இதற்கு, நாகை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கிங்ஸ்லி கிறிஸ்டோபர் தலைமையில் சமரசத்துக்குரிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

4 ஆயிரத்து 365 வழக்குகளுக்கு தீர்வு

இதில், 15 ஆயிரத்து 162 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 4 ஆயிரத்து 365 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 97 லட்சத்துக்கு சமரசம் ஏற்பட்டது. இதில் போக்சோ கோர்ட்டு மாவட்ட நீதிபதி மணிவண்ணன், நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி நாகராஜன், சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட செயலாளரும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான கார்த்திகா, சார்பு நீதிபதி சீனிவாசன், குற்றவியல் முதலாவது நீதித்துறை நடுவர் நாகப்பன், நடுவர் எண்-2 சண்மிகா ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல மாவட்டத்தில் உள்ள பிற கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடை பெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்