கும்பகோணம் அரசு கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா

கும்பகோணம் அரசு கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா

Update: 2022-05-20 20:22 GMT

கும்பகோணம்:

கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கலைக்கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு சுருக்க தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் துரையரசன் தலைமை தாங்கினார். தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன் முன்னிலை வகித்தார். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு நூலை வெளியீட்டு பேசுகையில்,

மாணவர்களுக்கு வெறும் புத்தக அறிவு மட்டும் இருந்தால் போதாது. சமூகத்தை பற்றி, வேலை வாய்ப்புகளை பற்றி, தொழில் துறைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் முதல்வன் என்கிற திட்டத்தை அறிவித்து எல்லா கல்லூரிகளிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளார். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி படிக்க கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததோடு மட்டுமல்லாமல் அந்த இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முற்றிலும் இலவச கல்வியை முதல்-அமைச்சர் வழங்க அரசாணை வெளியிட்டுள்ளார் என்றார். இதில் அரசு தலைமை கொறடா கோவி செழியன், அன்பழகன் எம்.எல்.ஏ, தி.மு.க. மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், சண்முகம் எம்.பி., கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் தமிழழகன் மற்றும் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்