தூத்துக்குடி லாரி அதிபர் கொலை வழக்கு:மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி லாரி அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-21 18:45 GMT

தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்தவர் ஜெகவீரபாண்டியன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 52). இவர் சங்கரப்பேரி ரோட்டில் லாரி புக்கிங் அலுவலகம் நடத்தி வந்தார். இவர் அலுவலகத்தில் இருந்த போது, நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, புதுக்கோட்டை அருகே உள்ள கீழ கூட்டுடன்காடு அய்யனார்காலனியை சேர்ந்த லட்சுமணன் (27), சாத்தான்குளத்தை சேர்ந்த செல்லப்பா (26), கணேசமூர்த்தி, சாத்தான்குளத்தை சேர்ந்த அண்டோ வின்ஸ்டன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவி செய்ததாக அய்யனார்காலனியை சேர்ந்த மகராஜன் (26) என்பவரை நேற்று சிப்காட் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்