தூத்துக்குடி: காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை

காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2022-11-18 03:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த வினோதினியும், குருவார்பட்டியை சேர்ந்த அந்தோணி ஜெகனும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் வினோதினியை மென்பொறியாளரான கதிரவனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

சென்னையில் இவர்கள் வசித்து வந்த நிலையில் மீண்டும் பழைய காதலனுடன் உறவை தொடர்ந்த வினோதினி, கடந்த 2018ல் கணவன் கதிரவனை திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கு கண்ணை கட்டி விளையாடுவது போல நடித்து அவரை கொடூரமாக கொலை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

இதில் வினோதியும், அந்தோணி ஜெகனும் கைது செய்யப்பட்ட நிலையில் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்