தோணித்துறை ரெயில்வே மேம்பாலம் 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும்

தோணித்துறை ரெயில்வே மேம்பாலம் 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும்

Update: 2023-08-30 18:45 GMT

நாகை அக்கரைப்பேட்டை தோணித்துறை ரெயில்வே மேம்பாலம் 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

மேம்பாலம் அமைக்கும் பணி

நாகை அக்கரைப்பேட்டை-வேளாங்கண்ணி சாலையில் தோணித்துறை ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

நாகை அக்கரைபேட்டை - வேளாங்கண்ணி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்

இந்த பாலம் 1,312 மீட்டர் நீளமாகும். இதில் அக்கரைப்பேட்டை பகுதியில் 472மீட்டர் நீளமும், திருவாரூர் செல்லும் சாலை பகுதியில் 418 மீட்டர் நீளமும், பஸ் நிலையம் செல்லும் சாலையில் 422 மீட்டர் நீளமும் ெரயில்வே மேம்பாலம் கட்டப்படவுள்ளது.

இந்த பாலம் 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும். இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டவுடன் அக்கரைபேட்டைக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் அக்கரைபேட்டையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு வரும் வாகனங்கள் ெரயில்வே கேட்டில் தடையின்றி செல்லலாம்.

தடையின்றி செயல்படும்

திருவாரூர் சாலையிலிருந்தும், பழைய பஸ் நிலைய சாலையிலிருந்தும் அக்கரைப்பேட்டைக்கு செல்லும் வாகனங்களும் ரெயில்வே கேட்டில் தடையின்றி செல்லலாம். இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டவுடன் நாகை நகர மக்களின் வாகனங்கள் போக்குவரத்து தடையின்றி செயல்படும் என்றார்.

நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் மாரிமுத்து, கண்காணிப்புப் பொறியாளர் (திட்டங்கள்) செல்வி, கோட்டப்பொறியாளர் பூங்கொடி, உதவிக் கோட்டப் பொறியாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விவசாயிகள் பணம் கொடுக்க வேண்டாம்

நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், நாகை மண்டலத்தில் விவசாயிகள் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதற்காக விவசாயிகள் எவ்வித பணமும் கொடுக்க வேண்டாம். மேலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் பணியாளர்கள் கையூட்டு பெற்றாலோ, முறைகேடுகள் காணப்பட்டாலோ விவசாயிகள் 9487808392 என்ற செல்போன் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்