தனியார் தீவன உற்பத்தி ஆலையால் அதிகரிக்கும் ஈக்கள் உற்பத்தி
மடத்துக்குளத்தையடுத்த துங்காவி ஊராட்சிக்குட்பட்ட மலையாண்டிபட்டினம் பகுதியில் தனியார் தீவன உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த தீவன உற்பத்தி தொழிற்சாலையில் முறையாக பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளாததால் ஈக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.
அந்த ஈக்கள் உணவுப் பண்டங்களை மொய்ப்பதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. மேலும் ஈக்கள் தொல்லையால் குழந்தைகள், பெரியவர்கள் யாரும் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர் என்று கூறி தீவன உற்பத்தி ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.