திருவிளக்கு பூஜை

புளியங்குடியில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-02-06 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

புளியங்குடி நகர பா.ஜ.க. சார்பில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 300-க்கும் பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை 21-வது வார்டில் உள்ள காளியம்மன் கோவிலில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன் கலந்து கொண்டு பூஜைக்கான பொருட்கள் வழங்கி, சிறப்பு அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புளியங்குடி நகர தலைவர் சண்முகசுந்தரம், தென்காசி மாவட்ட மகளிர் அணி தலைவி மகாலட்சுமி, நகர பொதுச்செயலாளர்கள் மாரீஸ், மாரியப்பன், பொருளாளர் அருணாசலம், மகாலட்சுமி, ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர், சங்கரநாராயணன், புளியங்குடி நகர இளைஞர் அணி தலைவர் சேகர் மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்