திருவிளக்கு பூஜை

கீழப்பாவூர் முப்புடாதி அம்மன் கோவிவில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-01-22 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் முப்புடாதி அம்மன் கோவில் கொடை விழா கால்நாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி திருவிளக்கு பூஜையும், புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு குடி அழைப்பு, திருவாலீஸ்வரர் கோவிலில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வருதல், நள்ளிரவு மாக்காப்பு பூஜை நடக்கிறது. நாளை (செவ்வாய்கிழமை) கீழப்பாவூர் சிவன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், மதியம், சிறப்பு பூஜை, நள்ளிரவு முழுகாப்பு அலங்காரம், பூச்சட்டி எடுத்து வருதல், சிறப்பு தீபாராதனை ஆகியன நடைபெறும். விழா நிறைவாக நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மதியம் 2 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்