திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள உவரி ராமர் கோவில் 122-வது திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. விழா நாட்களில் கும்பாபிஷேகம், தீர்த்த அபிஷேகம், சமய சொற்பொழிவு, அலங்கார பூஜை, கோலப்போட்டி, சிறப்பு திருவிளக்கு பூஜை, பரதநாட்டியம், அன்னபூஜை, அன்னதானம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.