சிங்கமுக காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
துளசியாப்பட்டினம் சிங்கமுக காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த துளசியாப்பட்டினத்தில் சிங்கமுக காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிதிரு விழாவையொட்டி உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக காளியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவிலின் எதிர்புறத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அமர்ந்து உலக நன்மை வேண்டி விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.