முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2023-04-15 19:00 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை முதல் நாள் சோபகிருது தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. 10 மணிக்கு 108 பால்குடம் சிதம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முத்தாரம்மன் கோவிைல அடைந்தது. 11 மணிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. 12 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 8.30 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேேபால் சாயர்புரம் அருகே உள்ள பெரும்படை சாஸ்தா கோவிலில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்