முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மார்கழி மாத பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான தீபாராதனை நடைபெற்றது. இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.