மழைமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

திருமருகல் அருகே மழைமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது

Update: 2022-08-15 18:29 GMT

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மழை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு மஞ்சள், மாவு பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், திரவியப்பொடி உள்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றன. பின்னர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுமங்கலி பெண்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்