களக்காடு கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி

களக்காடு கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-10-13 18:57 GMT

களக்காடு:

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவிலில் நெல்லை மகாராஜநகர் சிவநெறி மணிவாசகர் அருட்பணி மன்றம், களக்காடு ஆனந்த நடராஜர் திருவாசக குழு சார்பில் உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் களக்காடு மற்றும் நெல்லையில் இருந்து வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் நடராஜர் சன்னதியில் அமர்ந்து காலை முதல் மாலை வரை திருவாசக பாடல்களை பாடி முற்றோதுதல் நடத்தினர். இதையொட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்