கனமழை எதிரொலி: திருவாரூர், நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
கனமழை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்,
தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.
இந்த நிலையில், திருவாரூர், நாகப்பட்டினம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கனமழை பெய்து வருவதால், மேலும், கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், திருவாரூர், நாகை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.