திருவண்ணாமலை: கல்குவாரிக்கு வெடி பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர் காயம்

திருவண்ணாமலையில் கல்குவாரிக்கு வெடி பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.;

Update:2022-07-17 09:59 IST

வெம்பாக்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே கல்குவாரிகளுக்கு பாறைகளை வெடிக்க பயன்படுத்தும் பொருட்களான ஜெலக்டின் குச்சிகள் ஏற்றி வந்த வேன் சிப்காட் வளாக பகுதி சாலையின் நடுவே மின்விளக்கு கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேன் டிரைவர் ராஜா (வயது49) சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்து தூசி போலீசார் மற்றும் செய்யார் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெடிப்பொருட்களை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் டிரைவரிடம் விசாரித்த போது செய்யார் பகுதியில் உள்ள கல்குவாரிகளுக்கு செங்கல்பட்டு தாலுகாவில் இருந்து 95 பெட்டிகளில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ளான 19 ஆயிரம் ஜெலக்டின் குச்சிகளை ஏற்றி வந்ததும் தெரிய வந்தது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்