திருவையாறு ஒன்றியக்குழு கூட்டம்

திருவையாறு ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-04-10 18:58 GMT

திருவையாறு:

திருவையாறு ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலாளர் தேசிங்குராஜன் கூட்ட அறிக்கையை வாசித்தார். இதில் ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாண்மையில் உள்ள ராமச்சந்திர மேத்தா அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூரம் மண்டகப்படி பூஜை விமரிசையாக நடத்தப்படுகிறது. அதேபோல் சப்தஸ்தான திருவிழாவின்போது அன்னதானமும், மாதந்தோறும் ஒரு விசேஷ நாளில் அன்னதானமும் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் வரவுசெலவு கணக்கு, திட்டப்பணிகள், புதிய வளர்ச்சித்திட்ட பணிகள் உள்பட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்