திருநின்றவூரில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை; போலீஸ் விசாரணை

திருநின்றவூரில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-09-19 12:05 GMT

ஆவடி அடுத்த திருநின்றவூர் தாய் அலமேலு மங்கை நகரில் வசிப்பவர் அப்பாஸ் (வயது 44). இவர் நேற்று முன்தினம் இரவு பொன்னேரியில் வசிக்கும் அவரது தாயாரை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். இந்நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்து 13 பவுன் நகையை திருடி சென்றனர். இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதேபோல் திருநின்றவூர் ஸ்ரீராம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (72) இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக சென்றனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்து அரை பவுன் நகை, ரூ.50 ஆயிரம், கேமரா, வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அதேபோல் திருநின்றவூர் சரஸ்வதி நகரை சேர்ந்த ஒரு வீட்டில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 ஆயிரம் பணம் திருடி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்