திருமக்கோட்டை மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம்
திருமக்கோட்டை மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம்;
திருமக்கோட்டை மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. திருமக்கோட்டை, மகாராஜபுரம், பெருமாள் கோவில் நத்தம், சமுதாயம், கோவிந்தநத்தம், மான்கோட்டை நத்தம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷம் எழுப்பினர். இதற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர் செய்தனர்.