திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம்

ஆச்சாள்புரம் சிவலோக தியாகேசர் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.

Update: 2022-05-19 17:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் சிவலோக தியாகேசர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில், தோத்திரபூர்ணாம்பிகையுடன் திருஞானசம்பந்தர் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார். இந்த கோவிலில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முன்னதாக திருஞானசம்பந்தருக்கு உபநயனம், திருமுறைகள் திருவீதி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் நிகழ்வு, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னர் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, சிவாச்சாரியார்கள், தோத்திர பூர்ணாம்பிகைக்கு மங்கலநாண் அணிவித்து திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் உலக நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்