திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் தேரோட்டம்

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-09-19 18:45 GMT

தென்திருப்பேரை:

தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி களில் 8-வது ஸ்தலமாக விளங்கும் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் கடந்த கடந்த 10-ந் தேதி ேதர்த்திருவிழா கொடியேற்றம் நடந்து. தொடர்ந்து 5-ம் திருவிழாவான கடந்த 14-ந் தேதி இரவு சுவாமி வைத்தமாநிதி பெருமாள் கருட வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

விழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமி வைத்தமாநிதி பெருமாள் திருவீதி உலா நடந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு, பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து தேவியருடன் வைத்தமாநிதிப் பெருமாள் காலை 6 மணிக்கு தேருக்கு எழுந்தருளினார். சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த பெருமாள், தேவியர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்ட பின்னா் பக்தா்கள் 'கோவிந்தா' 'கோபாலா' கோஷங்களுடன் காலை 8 மணியளவில் தேரை வடம் பிடித்து இழுத்தனா். ேதர் 4 ரத வீதிகளில் வலம் வந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து பெருமாள், அம்பாள்களை வழிபட்டனர். காலை காலை 10.30 மணியளவில் தேர் நிலையை சென்றடைந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்