திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் கழிவறை வசதி செய்து தர வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-04-05 14:16 IST

திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவில் உலக புகழ்பெற்ற கோவிலாகும். வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலிலும் திரிபுரசுந்தரி அம்மன் தாழக்கோவிலிலும் இருந்து அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவில் அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற ஒரே சிவ தலமாக விளங்குகிறது.

மேலும் 12 ராசியில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பரிகாரஸ்தலம் உள்ள நிலையில் கன்னி ராசிக்கு பரிகார ஸ்தலமாக திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் விளங்குகிறது.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு உள்ளுர், வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் ஏன திரளனோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னர் வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் கிரிவலம் செல்கின்றனர்.

மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாளில் திரளான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மேலும் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர். 10 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். சித்ரா பவுர்ணமியன்றும் பல லட்சகணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். ஆகவே கிரிவல பாதையில் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்